அழுகுரல்

 உன் ஈரலின் அழுகுரல் கேட்கவில்லையா?

மனதில் சிறிதும் ஈரம் இல்லையா?

நினைவின் சாரலில் நீயும் ஒடிச்  சென்றால்,

தொலைந்த உன்னை கண்டிடலாம்.

உன்னைத் தொலைத்து உன்னில் புதைக்கும்

மாயத்தை நீயும் வென்றிடலாம்


மாயமனைத்தும் மாயோனின் நிழலல்ல

மாயும் நமக்கு எதுவும் நிலையல்ல

நிலையில்லா இவ்வாழ்வில் நிலையென்று எதை நினைத்தாய்?

நிறைத்து வைத்த குடுவையிலே நித்தமும் உனை நீ தொலைத்தாய்

நீ தொலைந்த கதையைக் கண்டு கொண்டால் 

திரும்பி வருதல் தொலைவல்ல ..

தொலைவல்ல  தொய்வல்ல என் தோழா

தொய்வல்ல தொலைவல்ல திரும்பி வருதல்










Comments

Popular posts from this blog

The Tale of Melon City / Class 11 / Supplementary / KVS PGT English

UG TRB ENG - Unit 1 - Age of Chaucer